வட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி; டில்லி வரும் 18 ரயில்கள் தாமதம்!

புதுடில்லி: அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, டில்லி வரும் ரயில்கள் தாமதமாக வந்தடைந்ததால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

டில்லியில் குளிர் அலைகள் தீவிரமடைந்து வருவதால், குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இன்று (டிச.,26) லேசான மழையுடன், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமாக உள்ளது.


தீவிர குளிர் நிலவுவதால், டில்லி நடுங்குவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 18 ரயில்கள் தாமதமாக வந்தடைந்தன. இதனால் ரயில்கள் சேவைகள் பாதிக்கப்படது.நாடு முழுவதும் இருந்து டில்லிக்கு வந்த 18 ரயில்கள் தாமதமாக வந்தது. அதன் விபரம் பின்வருமாறு:


* அதிகாலை 4:45க்கு வர வேண்டிய சத்பாவனா எக்ஸ்பிரஸ் 36 நிமிடங்கள் தாமதமானது.


* காலை 7:20 மணிக்கு வர வேண்டிய, விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 65 நிமிடங்கள் தாமதமானது.

* காலை 6:40 மணிக்கு வர வேண்டிய துரந்தோ எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் தாமதமானது உள்ளிட்ட 18 ரயில்கள் தாமதமாக வந்தன.

Advertisement