நிதிஷ் குமார் சதம் * மீண்டது இந்தியா
மெல்போர்ன்: நிதிஷ் குமார் சதம், வாஷிங்டன் அரைசதம் கைகொடுக்க, மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி மீண்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன் எடுத்தது.
இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்து 310 ரன் பின் தங்கி இருந்தது. ரிஷாப் (6), ஜடேஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ரிஷாப் (28), ஜடேஜா (17) நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் (50) அரைசதம் அடித்து கிளம்பினார். பும்ரா 'டக்' அவுட்டாக, நிதிஷ் குமார் டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 358 ரன் எடுத்து, 116 ரன் பின்தங்கி இருந்தது. நிதிஷ் குமார் (105), சிராஜ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.