களமிறங்கிய த.வெ.க., விஜய் ரசிகர்கள் குஷி

1

நடிகர் விஜய், அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். விஜயைத் திரையில் புதிய படங்களில் இனி பார்க்க முடியாது என்ற ஏக்கம், ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும், 'அரசியலில் துாள் கிளப்பத்தான் போகிறார்' என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர், தீவிர ரசிகர்கள்.

திருப்பூரில் சொத்து வரி உயர்வுப் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அ.தி.மு.க.,வில் துவங்கி, தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் உள்பட சொத்து வரி உயர்வுக்கெதிராக போராட்டங்களை நடத்திவிட்டன. வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

சொத்து வரி உயர்வுப்பிரச்னையில் விஜய் துவங்கியுள்ள த.வெ.க.,வின் நிலை என்ன என்பதில் ரசிகர்களுக்கு மட்டு மல்ல; பொதுமக்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகம் உண்டு.

ஆனால், போராட்டங்கள் நடந்து முடிந்தும், சத்தம் காட்டாமல் தான் இருந்தது த.வெ.க., ''கட்சித்தலைமையிடம் கேட்டிருக்கிறோம்; அங்கிருந்து சொன்னபிறகு, அதன்படி முடிவெடுப்போம்'' என்று நிர்வாகிகள் கூறிவந்தனர்.

இதற்கிடையே கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து 'சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்' என்று மனு அளித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அடடா... திருப்பூரில் களமிறங்கிவிட்டது த.வெ.க.,!

Advertisement