ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில் மஹா பெரியவர் விக்ரஹ வழிபாடு

திருப்பூர் : காஞ்சி மஹா பெரியவர், 31வது வார்ஷீக ஆராதனையை முன்னிட்டு, முதன் முறையாக விக்ரஹ வழிபாடு இன்று திருப்பூரில் நடக்கிறது.

திருப்பூர், ஓடக்காடு, காவேரி வீதியில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி ராமகிருஷ்ண பஜனை மடத்தில், மஹாபெரியவர் 31வது வார்ஷீக ஆராதனை இன்று நடக்கிறது. காலை, 6:00 முதல், 9:00 மணி வரை, கோவை வெள்ளலுார் ஸ்ரீவேத நாராயண பாடசாலை வித்யார்த்திகளின், வேத பாராயணம் நடைபெற உள்ளது. மஹா பெரியவர் மற்றும் ஸ்ரீஜெயேந்திரர் பாதுகைகளுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடக்கிறது; முதன்முறையாக, மஹா பெரியவர் விக்ரஹத்துக்கு திருப்பூரில் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement