2024ல் 268 பேர் உடல் உறுப்பு தானம்

சென்னை:தமிழகத்தில் கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த, 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1500 பேருக்கு மறுவாழ்வுஅளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும்,தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. இதன் காரணமாக, இந்திய அளவில் தமிழகம், தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு, அரசு மரியாதை அறிவிப்புக்கு பின், தமிழகத்தில், 300க்கும் மேற்பட்டோர், உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த, 2023ல், 178 பேர் உறுப்பு தானம் செய்தனர். அவர்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் வாயிலாக, 1000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வுபெற்றனர்.

கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த, 268 பேரிடம் இருந்து, 456 சிறுநீரகங்கள், 409 விழி வெண் படலங்கள், 210 கல்லீரல்கள் மற்றும் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, 1500 பேருக்கு பொருத்தப்பட்டு உள்ளன. மாநிலத்திலேயே அதிகபட்சமாக, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில், 28 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement