வண்ணார் சமூகத்தினருக்கு மானியத்துடன் வங்கி கடன்
கடலுார் : புதிய வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்கள், தொழில் தொடங்கிட மானியத்துடன் வங்கி கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது 3.50 லட்சம் ரூபாய், இதில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தொகையை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
புதிய வண்ணார் சமூகத்தினர் இத்திட்டத்தில் பயனடைய, தாட்கோ இணையதள முகவரி (https;//newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.