கைவினை கண்காட்சி

கடலுார் : பூம்புகார் கைவினை பொருட்கள் மற்றும் கைத்திறன் கண்காட்சி நெய்வேலியில் வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.

நெய்வேலி லிக்னைட் ஹாலில் துவங்கி நடந்துவரும் இக்கண்காட்சியில், கைவினை பொருட்கள், கைத்திறன் துணி வகைகள், நகை வகைகள் மற்றும் கைத்திறன் அறைகலங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலிருந்தும் கைவினைஞர்கள் நேரிடையாக வருகை தந்து தங்களுடைய பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

இக்கண்காட்சி 13ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 வரையில் நடக்கிறது.

கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement