--செயல்பாடின்றி முடங்கிய பூங்கா
ராஜபாளையம்: ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் பூங்கா பராமரிப்பின்றி முடங்கி உள்ளதால் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியின் கீழ் திருவள்ளுவர் நகர் குடியிருப்பு அமைந்துள்ளது. நுழைவு பகுதி அருகே 2018ல் ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம், உபகரணங்கள், நடைபாதை, சிறுவர்கள் தளவாட விளையாட்டு பொருட்கள் என அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதி தொடர் பராமரிப்பு, பாதுகாப்பு இன்றி பல லட்சம் மதிப்புள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் காணாமல் போவதும் உபயோகிப்புக்கு ஏற்ற வகையிலும் இல்லாமல் மாறிவிட்டன.
சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து சுற்றியுள்ள தெருக்கள் உயரம் கூடியதால் சுற்றுச்சுவர் உயரம் குறைந்து சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து பாதுகாப்பற்ற பகுதியாக மாறிவிட்டது.
அங்குராஜ்: மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்ட பூங்கா ஊராட்சி மூலம் மாதம் ஒருமுறை 100 நாள் பணியாளர்களை வைத்து புதர் செடிகள் மட்டும் அகற்றப்படுகிறது. மற்ற பராமரிப்பு பாதுகாப்பு செயல்பாடு இல்லை. எந்நேரமும் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது.