திருடியவர்கள் கைது

மதுரை: சேலம் ஆத்துார் சுப்புலட்சுமி 31. மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி. ஆர்., பஸ் ஸ்டாண்டில் நாகர்கோவில் செல்லும் பஸ்சில் காத்திருந்தார்.

அப்போது இவரது பை திருடப்பட்டது. அதில் அரை பவுன் தோடு, ரூ.500 இருந்தது. இதுதொடர்பாக மேலுார் சதாம் உசேன் 24, தெற்குதெரு வீரமணி 30, உலகநேரி சுந்தரபாண்டியன் 37, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement