போனஸ் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை 

கடலுார் : பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசு பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். கடந்த தேர்தலில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இன்னும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பல கட்ட போராட்டம் நடத்தியும் பலனில்லை.

இனியாவது, பணி நிரந்தரம், பொங்கல் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement