சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்கம்

1

புதுச்சேரி : இ.சி.ஆர்., சிவ விஷ்ணு திருமண மண்டபத்தில், திருவாவடுதுறை ஆதீனம் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.

நிகழ்ச்சியை பயிற்சி மையத்தின் பேராசிரியர் நெடுமாறன் துவக்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாலமுருகன் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை புதுச்சேரி கிளை அமைப்பாளர் பாலசுந்தரன் ஒருங்கிணைத்தார்.

அவர் கூறியதாவது: பயிற்சி வகுப்பில், தமிழ் எழுதப்படிக்க தெரிந்த இருபாலரும் சேரலாம். இதில் சேர கல்வி தகுதி, வயது வரம்பு எதுவும் கிடையாது.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் வரும், 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமையில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. இந்த இரு ஆண்டுகளில், மொத்தம், 24 வகுப்புகள் நடக்க உள்ளன.

ஒவ்வொறு பாடம் துவங்கும் போதும், அதற்குரிய நுால் வழங்கப்படும். இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகளில் பொறியாளர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்' என்றார்.

Advertisement