இணைந்து பணியாற்றுவோம்; இந்திய கம்யூ., முத்தரசன் உறுதி

விழுப்புரம்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக கம்யூ., கட்சிகள் இணைந்து செயல்படும் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று துவங்கிய மா.கம்யூ., மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:

இடதுசாரி ஜனநாயக மாற்று உருவாக்குவதற்கு, கம்யூ., கட்சிகள் ஒற்றுமை இன்றியமையாதது என்பது உணர்ந்து கொண்ட உண்மை. இவ்வழியில் கடந்த 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட முயற்சிகள், அதற்கு கிடைத்த பலன்கள், படிப்பினைகள் கற்றறிய வேண்டியது மிக முக்கியம்.

கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டும், தனித்தனியாகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் போராடி வந்துள்ளோம். அதில் பல சாதனைகளையும் கண்டுள்ளோம். தமிழகத்தில் மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் இணைந்து பணியாற்றி வருகிறது. இனி வரும் காலங்களிலும் இணைந்து பணியாற்றுவேம் என பேசினார்.

இந்திய கம்யூ., எம்.எல்., மாநில செயலர் ஆசைத்தம்பி பேசுகையில், தமிழகத்தில் இடதுசாரிகள் ஒற்றுமை அவசியமானது.

இந்த ஒற்றுமை தமிழகத்தின் நலனை மேலும் வலுப்படுத்தும். உறுதிமிக்க இடதுசாரிகளின் ஒற்றுமை மேலும் அதிகமாக வேண்டும் என்றார்.

Advertisement