'தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தி.மு.க., அரசு தடுப்பது வேதனை': பிரகாஷ் காரத் அதிருப்தி

7

விழுப்புரம்: தமிழகத்தில் தொழிலாளர்கள் சங்கம் வைத்து பதிவு செய்வதை, தி.மு.க., அரசு மறுப்பது வேதனையாக உள்ளதாக பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று துவங்கிய மாநில மாநட்டில் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியதாவது:

நாட்டில் இந்துத்துவா, வகுப்புவாத சித்தாந்தத்தை பதிவு செய்யும் நோக்கமாகவே பா.ஜ., வினர் செயல்படுகிறார்கள். மத்திய அரசும், வகுப்புவாத, மதவெறி கொண்ட நடவடிக்கையில் உள்ளது.

மத அடிப்படையில் மக்களை பிரித்து, மதவெறி அரசியலை செய்யும் மத்திய பா.ஜ., அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால், சமத்துவமில்லாத, பொருளாதரா ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. அம்பானி, அதானி, டாடா, பிர்லா, குழுமங்களுக்கு ஆதாயமாக மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழகத்தில் பா.ஜ., வை தனிமைபடுத்த வேண்டும், அதனை தோற்கடிக்கவே மா.கம்யூ., கட்சி, கூட்டணியாக இணைந்து செயல்படுகிறது.

தமிழகத்தில் காலுன்ற பா.ஜ., தீவிரமாக செயல்படுகிறது. நம் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதால், அவர்களால் நுழைய முடியாது.

இந்து, முஸ்லிம்கள் என மத அடிப்படையில் அரசியலை நகர்த்துகிறார்கள். அதனால் தான் உத்தரபிரதேசத்தில் பா.ஜ., பின்னடைவை சந்தித்தது. நாம், மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

தமிழகத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளிகள், அடிப்படை உரிமைக்காக போராடினர். முத்திரை பதித்த போராட்டம்.

தொழிலாளர் சங்கம் வைத்து பதிவு செய்ய தி.மு.க., அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement