மத்துாரில் பி.டி.ஓ., ஆபீஸ் கட்ட பூமி பூஜை
போச்சம்பள்ளி: மத்தூரில், 30 ஆண்டுகளுக்கு முன் பி.டி.ஓ., அலுவலகம் கட்டப்-பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. கட்டடம் பழுதான நிலையில் இருப்பதால், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலு-வலக கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது. ஊத்தங்கரை அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், பர்கூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன் மற்றும் அ.தி.மு.க.,- தி.மு.க., நிர்வா-கிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் சிவம்பட்டியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதே பகுதியில், 7 லட்சம் மதிப்பீட்டில் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்-பட்டது. எம்.எல்.ஏ., மதியழகன், பஞ்., தலைவர் பழனியம்மாள் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம் மற்றும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்-டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement