ஒரு கிலோ உப்பு ரூ.11,000 கரூர் திருவிழாவில் ருசிகரம்

கரூர் : கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், 39வது பிள்ளையார் நோன்பு விழா, கரூரில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப நாளில் நோன்பு துவங்கி, சஷ்டி, சதய நட்சத்திரம் கூடி வரும் நாளில், நிறைவடைகிறது.


நடப்பாண்டு நேற்று முன்தினம் இரவு, நோன்பு நிறைவு பெற்றது. இதில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நோன்பை நிறைவு செய்த பிறகு, மங்கள பொருட்கள் ஏலம் நடந்தது.


இதில், கேஸ் பேக், 12,000 ரூபாய், 1 கிலோ உப்பு, 11,000 ரூபாய், சிறுவர் சட்டை, 10,500 ரூபாய், பூஜை தேங்காய், மணமாலை, கற்கண்டு திருவிளக்கு உட்பட, 25க்கும் மேற்பட்ட மங்கள பொருட்கள், ௧.37 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின.


நோன்பு திருவிழாவில் ஏலம் எடுத்தால், அடுத்த நோன்புக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் பொருட்களை போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றனர். கரூர் நகரத்தார் சங்க டிரஸ்ட் தலைவர் செந்தில்நாதன், செயலர் மேலை பழனியப்பன் உள்ளிட்ட பலர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

Advertisement