'நல்ல மழை பெய்துள்ளதால் 'மா' மகசூல் அதிகரிக்கும்' கருத்தரங்கில் அதிகாரி தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 'மா' சாகுபடி கருத்தரங்கு நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் இந்திரா வர-வேற்றார்.


மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசுகையில், “தமி-ழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், கிருஷ்ணகிரி என்றால் மக்கள் சொல்வது, 'மா' வகைகளை மட்-டும்தான். அந்தளவுக்கு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மா உற்பத்தியை பெருக்க கருத்தை கேட்டு, 5 மடங்கு அதிக 'மா' மகசூலை விவசாயிகள் பெற வேண்டும்,” என்றார்.

வேளாண்துறை இணை இயக்குனர் பச்சையப்பன் பேசியதாவது:

மாவட்டத்தில், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 'மா' விவசாயம் செய்யப்படுகிறது. இதில், 80 சதவீதம் பெங்களூரா வகைகள் தான். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், 5 சதவீத அளவில் அல்போன்சா விளைவிக்கப்படுகிறது. அதிக 'பல்ப்' கிடைக்கும் தோத்தாபுரி வகைகள் உள்பட பல்வேறு மா வகை-களும் விளைவிக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்தபோதே பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக மானியத்துடன் கடன் வழங்கப்பட்-டுள்ளது. இருப்பினும் கடந்தாண்டு மழை குறைவால் மா விவ-சாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயத்தில் பாதிக்கப்-பட்ட, 5,198 பேர் கணக்கெடுக்கப்பட்டு அவர்
களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்-ளது.
நடப்பாண்டில் நல்ல மழை பெய்துள்ளதால் 'மா' மகசூல் அதிக-ரிக்கும். 'மா' விவசாயிகள் கல்தார் பயன்
படுத்துவதை தவிர்த்து, இயற்கையான முறையில்
விவசாயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய முதன்மை அலுவலர் அனிஷா ராணி, வேளாண் வணிக துணை இயக்குனர் மோகன், எலுமிச்சங்கிரி வேளாண் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுனர் ரமேஷ்பாபு. தோட்டக்கலை இணைப்-பேராசிரியர்கள் ஸ்ரீவித்யா, செந்தமிழ்செல்வி வேளாண் பொறி-யியல் துறை செயற்பொறியாளர் சந்திரா மற்றும், 100க்கும் மேற்-பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement