தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை பொங்கல் பரிசு வழங்கிய எம்.எல்.ஏ.,

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, நிர்வாகிக-ளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.


தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கட்சியில் உள்ள மாணவர் அணி, மருத்துவர் அணி, இளைஞரணி, சுற்றுச்-சூழல் அணி, மீனவரணி, இலக்கிய அணி உட்பட மொத்தம், 23 அணிகளின் நிர்வாகிகளுக்கு, வேட்டி, சேலை, இனிப்பு, காலண்டர் அடங்கிய பொங்கல் பரிசு பைகளை, எம்.எல்.ஏ., பிரகாஷ் வழங்கினார். மாவட்ட பொருளாளர் சுகுமார், மாணவ-ரணி அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம், இளைஞரணி அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement