கயா - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: கயா - கோவை சிறப்பு வார ரயில், நாளை முதல், சனி-தோறும்(ஜன., 11, 25, பிப். 1, 8 ஆகிய நாட்களை தவிர்த்து), இரவு, 7:35க்கு புறப்பட்டு, மிஷாபூர், ஜபல்பூர், நாக்பூர், விஜய-வாடா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே திங்கள் மாலை, 6:30 மணிக்கு கோவையை அடையும். சேலத்துக்கு திங்கள் மதியம், 3:15, ஈரோ-டுக்கு, 4:15க்கு வந்து செல்லும்.
மறுமார்க்க ரயில் வரும், 7 முதல், செவ்வாய் காலை, 7:50க்கு கிளம்பி, வியாழன் காலை, 9:15க்கு கயாவை அடையும். செவ்வாய் காலை, 9:20க்கு ஈரோடு, காலை, 10:17க்கு சேலம் வந்து செல்லும். இந்த ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி - 2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி - 6, ஸ்லீப்பர் பெட்டி - 10, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி - 4 இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement