கர்நாடகாவில் அறுவடை முடிந்து தமிழகம் திரும்பும் இயந்திரங்கள்

மேட்டூர்: கர்நாடகா மாநிலம் மாண்டியா, மைசூரூ மாவட்டங்களில், கே.ஆர்.எஸ்., கபினி அணை நீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். கடந்த ஆண்டு இரு அணைக-ளிலும் போதிய அளவு நீர் இருப்பு காணப்பட்டதால், விவசாயி-களின் தேவைக்கேற்ப கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இரு மாவட்டங்களிலும், நெற்
பயிர்கள் நன்கு வளர்ந்து முதிர்ச்சி அடைந்தன.


தொடர்ந்து தமிழகத்தின் சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து அறு-வடை இயந்திரங்கள், மாண்டியா, மைசூரு மாவட்டங்களுக்கு நெல் அறுவடை செய்வதற்கு சென்றன. அறுவடை முடிந்த நிலையில் தற்போது இயந்திரங்கள் மீண்டும் தமிழகம் திரும்பத்-தொடங்கி உள்ளன. இதில் பெரும்பாலான இயந்திரங்களை, டிரைவர்கள், கர்நாடகா மாநிலம், கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை, பாலாறு வழியே தமிழக எல்லைக்கு ஓட்டி வந்து, அங்கி-ருந்து அவரவர் பகுதிக்கு புறப்பட்டு செல்கின்றனர். நேற்று, 15க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள், மேட்டூர் வழியே புறப்பட்டன.

Advertisement