சட்டவிரோத கட்டடங்கள் மின் இணைப்பு துண்டிப்பு

பெங்களூரு: விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, மின் இணைப்பை துண்டிப்பதாக, பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, பெஸ்காம் வெளியிட்ட அறிக்கை:

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கையை, பெஸ்காம் தீவிரப்படுத்தியுள்ளது. பெங்களூரில் வரைபட விதிகளை மீறி, பல கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இது அசம்பாவிதங்களுக்கு காரணமாகின்றன.

இவற்றை தடுப்பதில் பெங்களூரு மாநகராட்சியுடன், பெஸ்காமும் கைகோர்த்துள்ளது.



இதுகுறித்து மாநகராட்சி, பஞ்சாயத்துராஜ் துறை உட்பட சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்ய வேண்டும்.



கட்டடங்கள் சட்டவிரோதமான கட்டங்களாக இருந்தால், மின் இணைப்பை துண்டிக்கும்படி, துறைகள் பரிந்துரை செய்யும்.



அதன்பின் அந்தந்த கட்டடங்களுக்கு மின் இணைப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிக்கப்படும்.

மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்; அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

பதில் அளிக்காவிட்டால் மின் இணைப்பை துண்டிக்க, பெஸ்காம் நடவடிக்கை எடுக்கும். வரைபட விதிகளை மீறாமல் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டடங்கள் கட்ட கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement