ஆட்டம் இனிதே ஆரம்பம்; இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் துவக்கம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக துவங்கியது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டு இதுவாகும். மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு, புனித விண்ணேற்பு அன்னை சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது வழக்கம். இந்தாண்டு தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று (ஜன.,04) துவங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனால், மாடு உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், விழாக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் செல்லும் இருபுறம் தடுப்புகள், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும், ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 2025ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது, வழக்கம் போல தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (5)
ஆரூர் ரங் - ,
04 ஜன,2025 - 21:50 Report Abuse
போட்டிக்கு முன்பு அவற்றுக்கு ஞான ஸ்நானம் செய்து வைப்பார்களா?
0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
04 ஜன,2025 - 12:30 Report Abuse
பொங்கல் பண்டிகை , ஹிந்து பண்டிகை அல்ல , என்று நிலை நிறுத்த , படாத பாடு படுகிறது , திராவை மாடல் . . .
0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 ஜன,2025 - 10:39 Report Abuse
காளைகளுக்கு அனுதாபங்கள். எந்தத் துன்பமும் விளைவிக்காத பிராணிகளை ஓட விட்டு பத்து பேர் துரத்தி துன்புறுத்தல் நியாயமல்ல. முடிஞ்சா ஒத்தைக்கு ஓத்தை மோதிப்பாருங்க. அதுதான் வீரம். பெரும்பாலான இடங்களில் சரியான தடுப்புக் கட்டைகள் பாதுகாப்பு இல்லாத ஜல்லிக்கட்டு நடக்கிறது. வாக்கு வங்கிக்காக அரசு மவுனம் காத்து வருகிறது?
0
0
Reply
கூமூட்டை - ,இந்தியா
04 ஜன,2025 - 10:27 Report Abuse
இதுவும் திராவிட மாடல்
0
0
Reply
Ponnusamy - ,இந்தியா
04 ஜன,2025 - 10:21 Report Abuse
வாழ jallikattu....
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement