கல்லுாரி பரிசளிப்பு விழா

சாத்துார்; சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் சாக்கர் 25 என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

சுவர்ணலதா தலைமை வகித்தார். தொழிலதிபர் எம்.ஏ.சி.எஸ். ரவீந்திரன் முன்னிலை வகித்தார். டாக்டர் ஹெர்பட் ஞானதுரை வரவேற்றார். மகளிர் பிரிவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பையூர் அணியும், ஆண்கள் பிரிவில் சாத்துார் எஸ்.எச்.என். எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி அணியும் முதல் பரிசை பெற்றது.

டி.எஸ்.பி.நாகராஜன் வெற்றி பெற்ற அணியினரை பாராட்டி சான்றிதழ் கேடயம் சுழல் கோப்பை வழங்கினார். பத்மாவதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை இன்னர் வீல் கிளப்,விருதுநகர் மாவட்ட ஃபுட்பால் அசோசியேசன் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement