ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி: வெளியானது அறிவிப்பு
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ., இளங்கோவன் கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவர் காலமானாதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானாதாக தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது.
தற்போது அவரது இறப்பால் தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கிளம்பியது. இந்நிலையில், இன்று (ஜன.,07) டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை பிப்.,8 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.