திண்டுக்கல்லில் மாரத்தான் போட்டி
திண்டுக்கல்; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான் போட்டிநடந்தது.
இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் 17 முதல் 25 வயது உடையவர்கள் பங்கேற்றனர். ஏ.எஸ்.பி., சிபின் தொடங்கி வைத்தார்.
போட்டி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை 5 கி.மீ.,ஆண்களுக்கான போட்டி கலெக்டர் முகாம் தொடங்கி பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, அரசு மருத்துவமனை, ஆர்.எம். காலனி, மாவட்ட நீதிமன்றம் வழியாக கலெக்டர் அலுவலகம் வரை 10 கி.மீ., நடந்தது.
200க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்,கேடயம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement