ராக்போர்ட் அரிமா சங்க மண்டல மாநாடு

திண்டுக்கல்; திண்டுக்கல் ராக் போர்ட் அரிமா சங்க மண்டல மாநாடு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., மகாலில் நடந்தது. மண்டல தலைவர் நசுரூதீன் தலைமை வகித்தார். முதன்மை ஆலோசகர் ஆடிட்டர் ரவீந்திரன்,மாவட்ட ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார். எல்.சி.ஐ.எப்., சி.எஸ்.ஆர்., தேசிய தலைவர் பாண்டியராஜன், பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசினர்.

நேருஜிநகர் பூங்கா பராமரிப்புக்கு சங்கம் சார்பில் ரூ.2 லட்சம் , 6 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம், 40 பேருக்கு ரூ.3 .50 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்க அவைத்தலைவர் என்.எம்.பி. காஜாமைதீன், ஸ்ரீஆதித்யா புளூ மெட்டல் உரிமையாளர் கண்ணன், திண்டுக்கல் ராக்போர்ட் அரிமா சங்க தலைவர் சதீஷ் பாலாஜி, செயலாளர்கள் விக்னேஷ் பிரபாகரன், ரமேஷ் குமார், பொருளாளர் ஆதித்யா, மண்டல பொருளாளர் முருகானந்தம், தலைவர் ஹரீஸ் ரவீந்திரன், சித்தாரா மகால் இயக்குனர் அமானி அபு அயூப் அன்சாரி, எஸ்.கே.கலர் ரூபிங் உரிமையாளர் செந்தில்குமார், பி .எஸ் .என். ஏ .,கல்லுாரி நிர்வாக இயக்குனர் ரகுராமன், நாகா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் கண்ணன், மாஸ் லைன் சங்க மூத்த நிர்வாகி சிவசண்முக ராஜன், தர்ஷினி மருத்துவமனை இயக்குனர்கள், திருலோக சந்திரன், பாலச்சந்தரி, லயன் சங்க மூத்த நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், காமராஜ், செண்பகமூர்த்தி, பிரபாகரன், ஹிந்துஸ்தான் ஸ்டில் உரிமையாளர் நடராஜன், ராக்போர்ட் லைன்ஸ் முன்னாள் நிர்வாகி முருகானந்தம், எல். கே. ஜூவல்லர்ஸ் நகை உரிமையாளர்கள் கண்ணன்,லக்சர் வேர்ல்ட் பள்ளி இயக்குனர் சுவாமிநாதன் , தேவர் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ரமேஷ் , மதர்தெரசா மண்டலம் லயன்ஸ் இன்டர் நேஷனல் தலைவர் இன்ஜினியர் குமார்,ஜெம்லயன்ஸ் சங்க தலைவர் ரவிசந்திரன் பங்கேற்றனர்.------------

Advertisement