நீர்நிலை பாதுகாவலர் விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு
கோத்தகிரி; மாநில அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் அமைப்புகளை பாதுகாத்து, நீர் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களான பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளை கவுரவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், 'மாவட்டத்திற்கு ஒருவர்' என, 38 பேருக்கு 'முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது ' மற்றும் ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் வரும், 17ம் தேதி. ஒரே நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. 'முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது ' குறித்த இணையவழியில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். தேர்வு குழுவின் முடிவு இறுதியானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement