நான்கு பேரை கடித்த நாய்; அச்சத்தில் பொது மக்கள்

கூடலார்; கூடலுார் ஓவேலி காந்திநகரில், 4 பேரை நாய் கடித்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் ஓவேலி காந்திநகர் பகுதியில், நாய் வளர்க்கும் ஒரு சிலர் நாய்களை கட்டி போடாமல், அவ்வப்போது வெளியில் விட்டு விடுகின்றனர். அதில், சில நாய்கள் அங்குள்ளவர்களை தொடர்ந்து கடித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் சிறுவர் உட்பட நான்கு பேரை இந்த நாய் கடித்துள்ளது.

மக்கள் கூறுகையில், 'குறிப்பிட்ட நாய் தொடர்ந்து, 4 பேரை கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். எனவே, அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்து, நாய் கடித்தவர்களுக்கு சிகிச்சையுடன் நிவாரண உதவி வழங்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement