ஒவிய மழை,ஒவியத்துனுள்ளும் மழை..
ஒரே இடத்தில் ஆறு பிரபலமான ஒவியர்கள் தங்களது ஒவியங்களை மழை போல அதாவது அதிகமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
இப்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில ஒவியங்களில் மழை நேரத்தில் வீதிகள் எப்படியிருக்கும் என்றும் வரைந்து வைத்துள்ளனர்,அந்த ஓவியங்களை தொட்டால் எங்கே மழையின் ஈரம் ஒட்டிக்கொள்ளுமோ! என்று ஆச்சரியப்படும் வகையில் அந்த ஒவியங்கள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன.
எழுமலை,ேஹமலதா சேனாதிபதி,சுந்தரன்,மணிமாறன்,ராஜேஷ்,வசந்தன் வீரப்பன் ஆகிய ஆறு ஒவியர்களின் ஒவியக்கண்காட்சி மற்றும் உலோக படைப்புக் கண்காட்சி சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியின் விசேஷம் சம்பந்தப்பட்ட ஓவியர்கள், பார்வையாளரகள் முன் தாங்கள் எப்படி ஓவியங்களை உருவாக்குகிறோம் என்பதை செயல்முறையாகக் காட்டியதுதான்.
கண்காட்சியை ஒவ்வொரு நாளும் சில விருந்தினர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர், அப்படி வந்தவர்களில் ஒவியர் மணியம் செல்வனும்,நடிகரும் ஒவியருமான சிவகுமாரும் முக்கியமானவர்கள் ஆவர்.
காசியின் அழகை,புதுச்சேரியின் நேர்த்தியை,இரவு நேர அயோத்தியை இப்படி பல்வேறு ஊர்களின் பகல் இரவு என்ற வித்தியாசமான ஓவியங்களை நீங்களும் பார்த்து மகிழலாம்,அனுமதி இலவசம்.
-எல்.முருகராஜ்