ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடங்கியது!

2

மதுரை: மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க இன்று (ஜன.6) மாலை 5 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. நாளை (ஜன.7) மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லுார்,பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் அவர்களுக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும், அலங்காநல்லூரில் 16ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும்.ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement