புது வைரஸ் பரவல்; முன்னெச்சரிக்கையாக இருந்தாலே போதும்: சவும்யா சுவாமிநாதன்

9

சென்னை: எச்.எம்.பி.வி., வைரஸால் பீதியடைய தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி,டாக்டர் சவும்யா சுவாமி நாதன் கூறினார்.

எச்.எம்.பி.வி., வைரஸ், சீனாவில் பரவியதை தொடர்ந்து, இந்தியாவிலும் தமிழகம், கர்நாடகத்தில் தலா 2 குழந்தைகளுக்கும் குஜராத்தில் ஒரு குழந்தைக்கும் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் கோவிட் தொற்று போல் பரவி விடுமோ என்பது அந்த அச்சம். இந்நிலையில் தான் டாக்டர் சவும்யா சுவாமி நாதன் பீதியடைய தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவு வருமாறு:

எச்.எம்.பி.வி., வைரஸ் பற்றி பீதியடைய தேவையில்லை. அது சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்; ஏற்கனவே இருக்கக்கூடியது தான். ஒவ்வொரு நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்படும்போதும், அவசரப்படுவதை விட, வழக்கமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டாலே போதும்.


சளி பாதிப்பு ஏற்பட்டால், மாஸ்க் அணிய வேண்டும், கைகளை கழுவ வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கடும் பாதிப்பு இருந்தால், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு சவும்யா சுவாமிநாதன் கூறினார்.

Advertisement