500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அரசு விண்ணப்பம்

சென்னை: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரக இயக்குனர் சங்குமணி கூறியதாவது:



தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே உள்ளன. அங்கு கூடுதலாக, 50 இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அதற்காக, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உடைய கல்லுாரிகளில், 150 இடங்களுக்கான மருத்துவ கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 10 மருத்துவ கல்லுாரிகளில், தலா 50 இடங்கள் என, 500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம்.


அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோல, 88 முதுநிலை இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement