கும்பமேளாவில் திருப்பதி கோவில்; பெருமாளை தரிசிக்கவும் சிறப்பு ஏற்பாடு!
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து, உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான கல்யாண ரதம் யாத்திரை தொடங்கியது; கும்பமேளா வரும் பக்தர்கள் வசதிக்காக, திருமலை திருப்பதியின் மாதிரி கோவில் பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை திருமலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, கூடுதல் அதிகாரி சி வெங்கையா சவுத்ரியுடன் இணைந்து கல்யாணரதத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இது குறித்து தேவஸ்தான தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; மகா கும்பமேளாவில் உ.பி.அரசால் ஒதுக்கப்பட்ட 2.8 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீவாரின் மாதிரி கோவிலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது. இதில் 170 பணியாளர்களை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ளது.
இவர்கள் திருமலை மாதிரி கோவிலில் அனைத்து கைங்கர்யங்களையும் செய்வார்கள். இதன் மூலம் அனைத்து பக்தர்களும் குறிப்பாக வடமாநில பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருள் கிடைக்கும். திருப்பதி கோவிலில் தினமும் நடப்பது போலவே அனைத்து வழிபாடுகளும் இந்த மாதிரி கோவிலில் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08 ஜன,2025 - 11:50 Report Abuse
இனி திருப்பதி லட்டு உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு கிடைக்கும்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement