வைப்பணை கிராமத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
அச்சிறுபாக்கம்:பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பணை கிராமத்தில், குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண, முக்கிய சந்திப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், மதுராந்தகம் - உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், வைப்பணை கிராமம் உள்ளது.
பல்வேறு பகுதியில் இருந்து, அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாள காண, இந்த கிராமத்தின் பல்வேறு இடங்களில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன் பதிவுகளை, ஊராட்சி அலுவலகத்தில் இருந்து, அதன் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வைப்பணை கிராமத்தில், பல ஆண்டுகளாக தெருவிளக்குகளின்றி இருந்த பகுதிகளில், தற்போது மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement