ஏரிக்கரை சாலையோரம் தடுப்பு அமைக்கப்படுமா?
ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், அஸ்வரே வந்தாபுரம் ஏரிக்கரை வழியாக, பந்திக்குப்பம் மற்றும் ஸ்ரீகாளிகாபுரத்திற்கு தார் சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.
இந்த சாலை வசதியால், ஸ்ரீகாளிகாபுரம், வீரமங்கலம், பந்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சோளிங்கருக்கு விரைவாக பயணிக்க முடிகிறது. இந்த சாலையை தவிர்த்தால், பில்லாஞ்சி வழியாக மாற்றுப்பாதையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில், இந்த ஏரிக்கரை சாலையோரம் தடுப்பு ஏதும் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்த சாலையின் வடக்கில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்கரை சாலையோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement