வீட்டில் சாராய ஊறல்: கைது 2

கூடலுார்,:தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் வீட்டில் கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

கூடலுார் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்து தகவலைத் தொடர்ந்து உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரியாதிலகராணி தலைமையில் போலீசார் பஞ்சாயத்து போர்டு தெருவில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு குடம், பானைகளில் கள்ளச்சாராய ஊறல் போட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ராஜா 55, உதவியாக இருந்த சிங்கத்துரை 58, ஆகிய இருவரை கைது செய்து 30 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரிக்கின்றனர்.

Advertisement