ஐரோப்பிய யூனியனுக்கு அச்சுறுத்தலா: டிரம்ப் கருத்துக்கு பிரான்ஸ் கண்டனம்

3


பாரீஸ்: ஐரோப்பிய யூனியன் எல்லையை தொட யாரையும் அனுமதிக்க முடியாது என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.


ஐரோப்பிய யூனியனில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இதனை விலைக்கு வாங்குவோம் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எங்கள் நாடு விற்பனைக்கு அல்ல என அதன் தலைவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை கையகப்படுத்த ராணுவம் அல்லது பொருளாதார தடைகளை அமெரிக்கா பயன்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இந்த இரண்டையும் நிராகரிக்க முடியாது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பிற்கு அது தேவை எனக்குறிப்பிட்டார்.



இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயல் பாரட் கூறியதாவது: இறையாண்மை மிக்க எல்லையை தொடுவதற்கோ, தாக்குவதற்கோ உலகில் உள்ள எந்த நாட்டையும் ஐரோப்பிய யூனியன் அனுமதிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுக்கும் என நம்பவில்லை. சட்டத்தின் ஆட்சி வலிமையாக திரும்பும் சகாப்தத்திற்கு நாம் திரும்பிக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement