இ.பி.எஸ்., வழக்கு; தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை

10


சென்னை: அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


அ.தி.மு.க., பொதுச்செயலாளராக இ.பி.எஸ்., அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2022ம் ஆண்டு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


எனவே, இ.பி.எஸ்., பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒரு சிலர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ்., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


மேலும், இ.பி.எஸ்., மனுவுக்கு ஜன.,27ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement