லாஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டுத்தீ: நாய்களை மீட்டு தர கெஞ்சிய நபர் வைரலாகும் வீடியோ

2

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் பரவிய காட்டுத்தீயின் மத்தியில் தனது நாய்களை மீட்குமாறு போலீஸ் அதிகாரியிடம் கெஞ்சிய நபரின் வீடியோ சமூக தளத்தில் வைரல் ஆகிறது.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவியது. சக்திவாய்ந்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீ, ஏற்கனவே சாண்டா மோனிகா மற்றும் மாலிபு இடையே 1,262 ஏக்கர் பகுதிகளை எரிந்துவிட்டது. இந்த காட்டுத்தீயால் மேலும் அழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதை தொடர்ந்து, 30,000 குடியிருப்புகளில் இருப்போருக்கு தகவல் அளிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவில்,லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு நபர், போலீஸ் அதிகாரியிடம் தனது பசிபிக் பாலிசேட்ஸ் வீட்டில் சிக்கியிருந்த தனது நாய்களை மீட்குமாறு அதிகாரியிடம் கெஞ்சுகிறார்.எனக்கு என் நாய்கள் வேண்டும். அவைகள் தான் எனது குடும்பம். ஒரு காட்டுத்தீ மேல்தட்டு சுற்றுப்புறங்களில் பரவியது. அப்போது தான் தனது நாய்களை வீட்டில் விட்டுவிட்டு வேலையில் இருந்ததாகவும், உடனடியாக தனது வீட்டு செல்ல முடிவு எடுத்து ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்து செல்ல முயன்றேன். என்னுடைய வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் எனது வீட்டிலிருக்கும் நாய்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த அதிகாரியிடம் கெஞ்சினார். இந்த உணர்ச்சிகரமாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement