விநாயகரை வழிபட்ட காட்டு யானை

தொண்டாமுத்தூர்; நல்லூர்வயலில், வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த விநாயகரை, வழிபட்டது.

நல்லூர் வயல், சத்யா அவென்யூ சேர்ந்தவர் ஜெயக்குமார். இப்பகுதியில், தினசரி காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி, அப்பகுதிக்கு வந்த ஒற்றைக்காட்டு யானை, ஜெயக்குமாரின் வீட்டின் கேட்டை திறந்து, உள்ளே நுழைந்தது.

அப்போது, வீட்டின் சுவற்றில் இருந்த விநாயகர் சிலையை தும்பிக்கையால் தொட்டு, முன்பக்க வலது காலை தூக்கியும், விநாயகரை வழிபட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. காட்டு யானை, விநாயகரை வழிபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement