பிளம்பர் கொலை; ஐந்து பேர் கைது
போத்தனூர்; கோவையில் பிளம்பரை கொலை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர் அடுத்து வெள்ளலூர் செல்லும் வழியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசிக்கும் தெய்வானையின் மகன் இன்பரசு, 19; பிளம்பர். இவரை ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்து தப்பியது.
போத்தனூர் போலீசார் விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் சுபாஷ் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசாரின் தேடுதலில் நேற்று சுபாஷ் சிக்கினார். மேலும் உதவி புரிந்த ஆகாஷ், சுகைல், நாகராஜ் உள்பட நால்வர் சிக்கினர்.
விசாரணையில், புத்தாண்டு அன்று சுபாஷ் பைக்கில் சென்றுள்ளார். அவரை நிறுத்திய இன்பரசு மற்றும் உடனிருந்தோர், ஏன் வேகமாக செல்கிறாய், என கேட்டுள்ளனர். வாக்குவாதம் ஏற்பட்டு, இன்பரசு சுபாஷை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரத்திலிருந்த சுபாஷ் தனது மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பினார். பின் தனது நண்பர்களான திருவள்ளூரை சேர்ந்த மேற்குறிப்பிட்டோரை கோவைக்கு அழைத்து வந்து, இன்பரசுவை கொலை செய்தது தெரிய வந்தது.