என்.ஜி.பி., கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை; என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. அவினாசிலிங்கம் மனையியல் பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

இதில், அவர் பேசுகையில், 'வாழ்வின் எதார்த்தங்களை புரிந்துகொண்டு செயல்படவேண்டும். சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, நேரம் தவறாமை போன்றவற்றை கடைபிடித்தால் வெற்றி பெறலாம்' என்றார்.

பட்டமளிப்பு விழாவில், 1903 இளங்கலை, 390 முதுகலை, 12 முனைவர் பட்டம் உட்பட, 2,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுர விக்கப்பட்டனர்.

நிகழ்வில், என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் செயலர் தவமணி தேவி பழனிசாமி, கோவை மருத்துவ மையத்தின் செயல் இயக்குனர் அருண், அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், முதல்வர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement