மரபணு வரிசை தரவு வெளியீடு
புதுடில்லி, மத்திய அரசின், உயிரிதொழில்நுட்பத்துறை சார்பில், மரபியல் தரவு மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், 10,000 இந்தியர்களின் மரபணு வரிசை தரவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் பேச்சு வீடியோ பதிவாக வெளியிடப்பட்டது.
அதில் பிரதமர் பேசியதாவது:
இந்த மரபணு வரிசை தரவுகளுக்கான ஆய்வுப் பணியில் ஐ.ஐ.டி., -சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் உட்பட 20 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவர்களின் பணி பாராட்டுக்குரியது.
உயிரிதொழில்நுட்ப ஆய்வுப் பணியில் இந்த தரவுகள் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன்.
இது, மரபணு மற்றும் தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் முன்னேற்றத்தை எளிதாக்கும். புதிய மருந்துகள் மற்றும் துல்லியமான மருத்துவ நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.