பொங்கலை முன்னிட்டு ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கலை முன்னிட்டு ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பாப்பிரெட்டிப்பட்டி,: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் நேற்று ஆட்டு சந்தை நடந்தது. பொங்கலை முன்னிட்டு ஏராளமான ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் வாங்க, வழக்கத்தை விட அதிகமானோர் வந்திருந்தனர். இதில், 10 கிலோ கொண்ட ஆடு, 8,500 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரையும், ஆடு, ஆட்டு கிடா, 10,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம், 25,000 ரூபாய் வரையும் விற்பனையானது. கடந்த வாரம், 40 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்ற நிலையில், நேற்று நடந்த சந்தையில், 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள், 1.50 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement