சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு; சென்னையில் அவசரகதியில் தரையிறக்கம்
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி துரித நடவடிக்கை ஒன்றை எடுத்தார். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, விமானம் தரையிறங்க சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக, 159 பயணிகள் உயிர் தப்பினர். மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
Sidharth - ,இந்தியா
10 ஜன,2025 - 12:51 Report Abuse
இதுதான்திராவிட மாடலா?- சங்கி ராம பக்தர்கள்.
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
10 ஜன,2025 - 12:05 Report Abuse
கடந்த வாரத்தில் போயிங் ரக விமானத்தில் பயணிக்க மாட்டோமான்னு வாசகம் பிரபலமானது ....தேவைப்பட்டால் விமானங்களை முழு ஆய்விற்கு உட்படுத்துவது நல்லது ... ...
0
0
Reply
Gopal - Jakarta,இந்தியா
10 ஜன,2025 - 11:59 Report Abuse
எந்த ஏர் லைன்ஸ்?
0
0
Reply
Abhivadaye - Salem,இந்தியா
10 ஜன,2025 - 10:54 Report Abuse
இதே மாதிரி போலீஸ் ஏன் நடந்து கொள்ளல?
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10 ஜன,2025 - 10:16 Report Abuse
அந்த விமான நிறுவனத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? அவர்களுக்கு பிசினஸ் போய்விடுமோ என்கிற அச்சத்திலா? விமான ஓட்டியின் pilot சாதுரியத்தை மெச்சுகிறேன், வாழ்த்துகிறேன்.
0
0
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
10 ஜன,2025 - 12:19Report Abuse
உண்மை தான் முன்பு Air India இந்திய அரசு நிர்வாகத்தில் இயங்கிய போது கூட Air India என்று விமான நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு இதே dinamalar ல் news வந்துச்சு, எனக்கு நன்கு நினைவு இருக்கு. Private விமான நிறுவனத்தின் பெயரை வெளியிட மறுக்கின்றனர் பத்திரிக்கைகள்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement