ரயில்வே கோட்ட மேலாளரிடம் பயணிகள் கோரிக்கை மனு
ரயில்வே கோட்ட மேலாளரிடம்
பயணிகள் கோரிக்கை மனு
பாப்பிரெட்டிப்பட்டி : மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில், பொம்மிடி ரயில் ஸ்டேஷனில், 15.18 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் கடந்த பிப்., 26ல் தொடங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, உதவி கோட்ட மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைவாக முடித்து இன்னும் ஒரு மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
அப்போது பொம்மிடி ரயில் பயனாளர்கள் சங்க நிர்வாகிகள், ஆசான் கான், கார்த்திகேயன், முனிரத்தினம், சுரேஷ், ஜெபசிங், ஆகியோர் கோவை, திருவனந்தபுரம், கொச்சுவேலி, நாகர்கோவில், ஆகிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ்களை, பொம்மிடியில் நிறுத்த வேண்டும். சென்னை, -அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ்சை, சேலம் வரை நீட்டிக்க வேண்டும். அரக்கோணம் --சேலம் மெமு எக்ஸ்பிரஸ்சை தினமும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, கோட்ட மேலாளரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக, அவர் தெரிவித்தார்.