என்னது, ரூ.210 கோடியா? தொழிலதிபரை 'ஷாக்' ஆக வைத்த மின்கட்டணம்!

2


தர்மசாலா: ஹிமாச்சல பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டிற்கு ரூ.210 கோடி மின்கட்டணமாக வந்திருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


பெஹர்வின் ஜத்தான் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லலித் திமான். இவரது வீட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ரூ.210 கோடி மின்கட்டணம் வந்துள்ளதாக காண்பித்துள்ளது.


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லலித் திமான், இது குறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், நேரில் வந்து ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு என்பதை கண்டறிந்து சொல்லியுள்ளனர். பின்னர், மறுஆய்வு செய்ததில், லலித் திமானுக்கு ரூ.4,047 மின்கட்டணம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.


இதேபோல, கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த டெய்லர் அன்சாரி என்பவருக்கு, அவரது கடையில் இருக்கும் பொருட்களின் விலையை விட, மின்கட்டணம் அதிகம் வந்துள்ளது. அதாவது, ரூ.86 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அளித்த புகாரின் பேரில், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், இரு இலக்க எண்கள் சேர்ந்து வந்துள்ளது கண்டறியப்பட்டது.

Advertisement