இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அடித்துக் கொலை; நாய் குரைத்த தகராறில் வெறிச்செயல்

1

திருச்சி: திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி முத்து கிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளராக இருந்தவர் முத்துகிருஷ்ணன். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நாய் குரைத்ததால் இவருக்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisement