மம்தா கட்சியில் கேரளா எம்.எல்.ஏ. ஐக்கியம்

கோல்கட்டா: சி.பி.எம்., ஆதரவுடன் மலப்புரத்தில் சுயேச்சையாக எம்.எல்.ஏ., ஆக வெற்றி பெற்ற பி.வி. அன்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஆட்சி நடந்து வருகிறது. இத்தொகுதியில் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு அன்வர் வெற்றி பெற்றார். துவக்கத்தில் பினராயி விஜயனுடன் நட்புடன் இருந்த அவர், பிறகு மோதல் ஏற்பட்டது. இதனால், அரசை விமர்சித்து பேசி வந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் தி.மு.க.,வில் இணைவர் எனவும் தகவல் வெளியாகின. ஆனால், அது எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் இன்று(ஜன.,10) அன்வர், திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உறுதி செய்துள்ளார்.

Advertisement