ஜல்லி கற்கள் பெயர்ந்த அத்திப்பட்டு தார்ச்சாலை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் இருந்து, ராமலிங்காபுரம் செல்லும் தார்ச்சாலை, ஜல்லி கற்கள் சாலையாகி இரண்டு ஆண்டு ஆகிவிட்டது.

இந்த சாலையை, அத்திப்பட்டு, காவேரிராஜபுரம், ரங்காபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் நகரத்துக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோன்று ராமலிங்காபுரம், குன்னவளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அரக்கோணம் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த தார் சாலை பெயர்ந்து, ஜல்லி சாலையாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன், விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement