சாலை விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: பர்கூர் போலீசார் சார்பில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாண-வியர் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாண-வர்கள் இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பர்கூர் டி.எஸ்.பி முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பர்கூர் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணி, தாலுகா அலுவலகம் வழியாக பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ.,க்கள் கனிமொழி, முரளி மகா-தேவன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement